இனி ஈசியாக வீடியோ எடிட் செய்யலாம்! புதிய யூடியூப் கிரியேட் AI அப் அறிமுகம்.

யூடியூப் ஆனது, வீடியோக்களை உருவாக்குவதற்காக புதிய அம்சங்களுடன் யூடியூப் கிரியேட் AI அப் அறிமுகம் செய்துள்ளது.

தற்போதைய காலத்தில் நாம் அப் மூலமாகவோ அல்லது சாஃப்ட்வேர் மூலமாகவோ வீடியோக்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். அது கடினமான செயல்முறையாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், வீடியோக்களை உருவாக்குவதற்கு யூடியூப் கிரியேட் என்ற புதிய மொபைல் செயலி கடந்த வியாழன் கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், யுகே, இந்தோனேஷியா, கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் ஆண்ட்ராய்டில் ப்ளே ஸ்டோரில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த யூடியூப் கிரியேட் என்ற புதிய மொபைல் செயலி கிடைக்கிறது.

ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு கிடைக்கும். இது, குறும்படங்கள் மற்றும் நீண்ட வீடியோக்களுக்கு எடிட்டிங் செய்யும் இலவச செயலியாகும்.

*என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

இந்த புதிய செயலில் எடிட்டிங், டிரிம்மிங், ஆட்டோமேட்டிக் தலைப்பு, குரல் மற்றும் மாற்றங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும், இது ராயல்டி இல்லாத இசையை தேர்வு செய்யவும் அனுமதிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ட்ரீம் ஸ்கிரீன் எனப்படும் புதிய அம்சம் மூலமாக வீடியோக்களின் பின்னணியை தேர்வு செய்யவும் முடியும். இதனிடையே, வீடியோ குறித்த விவரங்களை சொன்னால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தேவையான பின்னணியை சேர்க்கவும் அனுமதிக்கும்.

இந்த புதிய செயலியை உருவாக்குவதற்கு 3,000 படைப்பாளர்களின் கருத்துக்களை பயன்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான வசதிகளுட்ன யூடியூப் கிரியேட் செயலி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.