ஈரானில் பெண்கள் அணியும் ஆடைகள்  கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஈரானில் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஈரானில் பெண்கள் வெளியில் செல்லும் போது ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம் எனினும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற விதிமுறைக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.

கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாமல் வெளியில் சென்ற இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஈரானில் போராட்டங்கள் வெடித்ததுடன் பலர் கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.இந்த நிலையில் ஈரான் அரசாங்கம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டு சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.இந்த சட்டமூலத்திற்கு அமைய ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சென்றால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அத்துடன் பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.