சர்வதேச விசாரணைக்குத் தயார் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான்  தெரிவிப்பு.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குத் தயாரென இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நான் சர்வதேச விசாரணைக்கு தயார். நீங்கள் எப்போது அதை நடத்துவீர்கள் என சொல்லுங்கள் நான் தயாராக இருக்கிறேன்.அதுமட்டும் அல்ல நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கோட்டாபய ராஜபக்ச உங்கள் தலைவருக்கே அதிபர் பதவியை ஒப்படைக்க முன்வந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்றார்.