ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழர்கள் நாளை ஐநா முன் போராட்டம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த அரசாங்கம் அழைப்பு  விடுத்துள்ளது. நாளை  நியுயோக் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில் உரையாற்றுவதற்காக செல்லும்  ரணில் விக்ரமசிஙக் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறியவர்.

இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஐனாதிபதி கோத்தபாயா, மகிந்த ராஐபக்ச, இராணுவத் தளபதிகள், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரையம் பாதுகாப்பதற்காக பதவியும் வழங்கி தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார் என குற்ஞ்சாட்டப்பட்டு வருகின்றார்.

ரணில் பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும் ரணிலை அமெரிக்காவில் விரட்டி அடிப்போம்!அம்பலப்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவாழ் தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறை வேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் உங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றது என அறிவித்தள்ளது.  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்குமாறும், தமிழர்களை அடித்து கொல்லுமாறும், உத்தரவு பிறப்பித்த ரணில், அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா? தமிழர்களே நியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்கு உண்மையையும், எடுத்துரைப்போம் என நாடுகடந்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.