தியாகதீபம் திலீபனின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி மீதான தாக்குதல் தொடர்பாக ஐ.நா வில் எடுத்துரைக்கப்பட்ட கண்டனம்.

ஈழத் தமிழர்கள் சிங்கள துணை ராணுவப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏனெனில் இம்மாதம் உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல். 12 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விரதம் இருந்து தனது உயிரை தியாகம் செய்தவர் இறந்து, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர் சிவில் சமூகம், திருகோணமலை கப்பல்துறை வழியாக வாகனம் சென்றபோது, சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருந்த போதிலும், சிங்களக் கும்பல் கற்கள் மற்றும் பொல்லுகளால் வாகனத்தைத் தாக்கியது தொடர்பாக  ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிசாந்தி பீரிசினால் தமிழர்கள் சார்பாக அறிக்கை வாசிக்கப்பட்டது.

தமிழர்களின் இனப்படுகொலை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான அத்துமீறல்கள் மீதான இராணுவம் மற்றும் துணை இராணுவப் பிரயோகங்கள் குறித்து எமது தாயகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்து  ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி ,இனப்படுகொலை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.