சிறுமிகளின் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்களுடன் பௌத்த பிக்கு கைது !

ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமானேர் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடமிருந்து மூன்று கணினிகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடக குழுக்களில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கணினி குற்ற புலனாய்வு பிரிவின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.