ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் பிள்ளையான், கருணா உட்பட மேலும் பலர் .

மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய இலங்கை மீதான ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் 10 முக்கிய நபர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல துணை ஆயுத குழுக்களின் தலைவர்களின் பெயர்களும்,  சவேந்திரசில்வா உள்ளிட்ட பல முன்னணி இராணுவத்தளபதிகள் அரசியல் பிரமுகர்களின் பெயர்களும்  ஐ.நாவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.