IMF பிரதிநிதிகளுடனான முதலாவது மீளாய்வுக் கூட்டம் ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று முதல் இருவார காலத்துக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் அதன் இறுதி அமர்வு செப்டெம்பர் 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறும்.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.