ஆர்.என்.ரவியை அனுப்பியதன் நோக்கம் தமிழகத்தில் மதத்சர்ச்சையை உருவாக்குவதற்க்காகதான்: காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபில்  தெரிவிப்பு.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பில் இருக்கிறார்.  அவர் பொறுப்பெற்ற முதல்வே. ஆளும் திமுக அரசுக்கும் அவருக்குமான கருத்து மோதல் போக்கு என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல்இ,உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பது, மத ரீதியிலான பேச்சுக்கள், அரசியல் விமர்சனங்கள் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ரவியை எதிர்த்து தீர்மானங்கள், போராட்டம் என அவ்வப்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபில் இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது ஆளுநர் ரவி பற்றிய தனது கருத்தையும் முன்வைத்து பேசினார்.  முதலில் கவர்னர் ஆர்.என் ரவியை எதற்காக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார் என  பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் கேட்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.தமிழகத்தில் இதுவரை மதச் பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை.

அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆர்.என்.ரவியை அனுப்பியதன் நோக்கம்இ தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் சர்ச்சையை உருவாக்குவதற்க்காகதான்.  மத பிரச்சினைகளை எழுப்பும் குற்றவாளிகள் நீங்கள்தான். ஆளுநர் ரவி தமிழகத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கிறார் என்றும் ஆளுநர் ரவி பற்றிய தனது விமர்சனத்தை கபில் சிபில் கூறினார்.