இலங்கையில் 10 இற்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான ஐநாவின் முதல்கட்ட விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 10 இற்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் படை அதிகாரிகள் மீது அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுவருவதாக கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையில் அனைத்துலக குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பிலான இந்த விசாரணைக்கான திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 29 நாடுகளின் ஆதரவுகளும் பெறப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான தகவல்களை ஐ.நா இரகசியமாக பேணிவருகின்றது. விசாரணனை மேற்கொள்ளப்படவிருக்கும் படை அதிகாரிகள் மற்றும் அரசில்வாதிகளின் விபரங்களும் இரகசியமாக தயாரிக்கப்பட்டுள்ளன.ஆதாரங்களை திரட்டுவது மற்றும் ஆவணப்படுத்துவது தொடர்பில் பல நாடுகள் மற்றும் அமைப்புக்களிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 46 ஆவது தீர்மானத்தில் குறிப்பிட்டது போல சாட்சியங்களை சேகரிப்பதற்கு 29 நாடுகளின் உதவிகள் நாடப்பட்டுள்ளன.இந்த சாட்சியங்களின் அடிப்படையில் இலங்கையில் உள்ள 10 இற்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் படை அதிகாரிகள் மீதான முதல்கட்ட விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.