கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள்: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்


இரண்டாம் நாளான நேற்றுஅகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அவதானித்த வகையில் பெண்ணினுடைய உடலங்கள் உறுதிபடுத்த கூடியதாக தென்படுகின்ற அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதனை விட நாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததனை காணமுடிந்தது. இதிலிருந்து யோசிக்க கூடியதாக உள்ளது என்னவெனில் பல உடலங்கள் இதில் தென்படலாம் என்பது இதில் இருக்கும் அனைவருக்குமே தெரியும் என அவர் சட்டிக்காட்டினார்.