அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையாக்கப்படும் சட்டம்.

அவுஸ்திரேலியாவிற்கு கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்கள் இலாபகரமான தொழில்சார் கற்கைநெறிகளில் சேர்வதற்கு அனுமதி வழங்கிய விசா சட்டத்தை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது வரை, உயர் கல்விப் படிப்புகளுக்காக அவுஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்கள், அடிப்படைப் பாடநெறிகளைத் தவிர மற்ற இலாபகரமான குறுகிய படிப்புகளையும்  படிக்கும் வாய்ப்பு இருந்தது.வெளிநாட்டு மாணவர்களை உள்ளூர் வேலை சந்தைக்கு தயார்படுத்தும் வகையில் தொடர்புடைய குறுகிய படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சமீப காலமாக பல வெளிநாட்டு மாணவர்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்கள் அடிப்படை பல்கலைக்கழக படிப்புகளை கைவிட்டு மேலே குறிப்பிட்ட குறுகிய படிப்புகளுக்கு நிரந்தரமாக மாறுவதற்கான போக்கை கையாண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது.

2019 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கூறிய இலாபகரமான குறுகிய பாடநெறிகளுக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 10,500 ஆகவும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 17,000 ஆக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த போக்கை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.