மொபைல் போனை அதிகமாக பாவிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம்.
மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.
குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என இங்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பிள்ளைகளின் கல்வி தோல்வியடைந்து பெற்றோர்களை எதிரிகளாகவே பார்ப்பதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போதை பழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதால் குழந்தைகள் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.