இலங்கையில் நீர் விநியோகத்தில் சிக்கல்.
இலங்கையில் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிலவும் வறட்சி இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குருநாகல் – பண்டுவஸ்நுவரவிலுள்ள கொலமுனு ஓயா தற்போது முற்றாக வற்றியுள்ளது. இதனால் பண்டுவஸ்நுவர, பண்டார கொஸ்வத்தை பகுதிகளுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் பௌசர்களின் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.
நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் நிலைகளில் 50 வீதம் நீர் குறைவடைந்துள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
ஆகவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னாரில் நிலவும் வறட்சியினால் கோரைக்குளம் பறவைகள் கண்காணிப்பகத்தில் உள்ள குளங்கள் வற்றியுள்ளன.
புலம்பெயர் பறவைகள் அதிகளவில் சஞ்சரிக்கும் இடமாகவே கோரைக்குளம் பறவைகள் கண்காணிப்பகம் விளங்குகின்றது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் கால்நடைகளும் நீரின்றி நடமாடுவதை அவதானிக்க முடிந்து.
யாழ். சங்கானை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அராலி , பொன்னாலை பகுதிகளில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.