ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கொட்டகலை கிருஸ்லஸ்பார்ம் பகுதியில் இந்த பெண் இரயிலில் மோதுண்ட நிலையில், சடலம் கொட்டகலை இரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர் கொட்டகலை ருவன்புர பகுதியை சேர்ந்த சுப்பிரணியம் இமேசா என்ற 18 வயதுடையவர்  என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.