திருக்கோணமலை-சொற்சிலம்பம் 2023 விவாத போட்டி

Keshihan Ilamuruganathan-திருகோணமலை

Leo club of Trincomalee Heroes அமைப்பு ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட சொற்சிலம்பம் 2023 விவாத போட்டி 13.08.2023 காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை புனித சவேரியர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் திருக்கோணமலையைச் சேர்ந்த தேசிய பாடசாலைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி, தி/ இ கி ச கோணேஸ்வரா இந்து கல்லூரி, தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, தி/ சாகிரா கல்லூரி ஆகியவை பங்கு கொண்டிருந்தன.

இதில் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இறுதிப் போட்டியில் தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி வெற்றி ஈட்டி, சொற்சிலம்பம் 2023 வெற்ற கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.