பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை -உயர்நீதிமன்றம் உத்தரவு.

பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் இந்த சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் அந்த பலகை அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தப் பலகையை அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அதில் மனுதாரரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்து அறநிலைத் துறை சட்டத்தின் படி, இந்து அல்லாதவர் இந்து கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை இருந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.