அரிசி ஏற்றுமதி தடையை இந்தியா உடனடியாக நீக்க வேண்டும்: சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை.

இந்தியாவில் அண்மையில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை உடனடியாக நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உள்நாட்டில் அரிசிக்கு ஏற்படும் கேள்வியை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்திய மத்திய அரசு ‘பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை’ விதித்தது.

இந்த தடை உத்தரவினை தொடர்ந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் அரிசிக்கு பெருமளவு தட்டுப்பாடு நிலவியதுடன், மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அரிசி நுகர்வில் ஈடுப்பட்டு வந்தனர். இதனையடுத்து, குறித்த தடையை படிப்படியாக நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

எனவே, உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது.இந்தியாவில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் பொருட்களின் விலைகள் உயருமே தவிர குறையாது.படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும்’ என சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் தெரிவித்திருக்கிறார்.