நல்லூர் கந்தனை தரிசித்த பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர்.

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தார்.

திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி வந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்தார்.

இவருடன் யாழ் மறை மாவட்ட குரு முதல்வரும் அருட்தந்தை ரொஷான் அடிகளாரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.