கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
செய்தி
நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர்.
இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
குறித்த இந் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள், நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் பறையிசையுடன் நிகழ்வு நடைபெறும் இடந்திற்கு அழைத்துவரப்பட்டார்கள்.
பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது , பொதுச் சுடரினை பொண்டி நகரசபை முதல் திரு. ஸ்டீபன் ஏர்வே அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர்களை மாவீரர் உரித்துடையோர்கள் ஏற்றிவைத்தைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது தொடர்ந்து மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பொண்டி நகரசபைபை முதல்வர் , துணை முதல்வர்கள், நகரசபை உறுப்பினர்கள், கார்த்திகை27 சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மரத்தினை நாட்டினார்கள். மரம் நாட்டியதைத் தொடர்ந்து பொண்டி நகரசபை முதல்வரால் கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவுக்கல்
பொண்டி நகரசபை துணை நகரபிதாக்கள் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைத்து தமிழர்களின் மூத்த இசைகருவியான பறை முழங்க நினைவுக்கல் திரைநீக்கத்தை செய்துவைத்தார்கள்.
தொடர்ந்து நகரசபை முதல்வரின் சிறப்புரை செல்வி.அம்மு ரஞ்சித்குமரின் பிரஞ்சு உரை, கார்த்திகை 27 சங்கத்தின் தலைவர் திரு.பிரபாகரன் ஆகியோரின் உரைகளைத்தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் மகேந்திரன் குலராஜின் நன்றியுரையும் இடம்பெற்றது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையூட்டும் பாடலுடன் இந் நிகழ்வு நிறைவுபெற்றது.