திருகோணமலை-இளைஞர்கள் இருவர் மீது துப்பாக்கிச்சூடு.

இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள்  இருவர் மீது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவம் ஒன்று குச்சவெளி பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த  இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

ஜெயநகர் பகுதியை சேர்ந்த 17  மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திய நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

குச்சவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.