சொத்து குவிப்பு வழக்கு – அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல்  விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையால் பதியப்பட்ட வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2022 நவம்பரில் வழக்கு மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட  முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தற்போது அவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யாத காரணத்தாலும், உரிய சாட்சியங்கள் மற்றும் முகாந்திரம் இல்லாததாலும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.