கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி தற்கொலை.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைகழக கலைப்பு இடம் மூன்றாம் வருட மாணவி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (25) திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதி ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த (23) வயதுடைய தெய்வேந்திரன் டிலோஜினி என்பவரே இவ்வாறு மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் வேறொரு பெண்னுடனான தொடர்பினை அறிந்திருந்த நிலையில் மனவேதனை அடைந்திருந்ததாகவும் கடந்த 22ம் திகதி தனது தாயார் பாவிக்கும் நோய்க்கான மாத்திரைகளை எடுத்து அதிகமாக உட்கொண்டிருந்ததாகவும் பின்னர் மயக்கமுற்ற நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (25) உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.