அதிபர் நியமனங்களை வழங்குவதனை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கான புதிய நியமனங்களை வழங்குவதனை தடுக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

வணக்கத்திற்குரிய புத்கோட்டே சுமணசந்திர தேரர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.