லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் காலமானார்..!

அமெரிக்கா, லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் (John Goodenough)வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100. 2019ல் தன்னுடைய 97வது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை ஜான்குட் எனஃப் கண்டுபிடித்தார்.

1922ல் ஜெர்மனியில் பிறந்த ஜான்குட் எனஃப் 2-ம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா அறிவியலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கினார். ஜான்குட் எனஃப் கண்டுபிடித்த லித்தியம் பேட்டரியை டெஸ்லாவின் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.