நாட்டை இரகசியமாக முடக்கிவிட்டு அவசர தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது: ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு.
தேசிய கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான அநீதியான செயற்பாடுகளுக்காக நாட்டை இரகசியமாக முடக்கிவிட்டு அவசர தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனால் நாட்டு மக்களே பாரதூரமான சிக்கலை சந்திக்க நேரிடும்.
மக்களை ஏமாற்றிவிட்டு அவர்களின் நோக்கங்களை மிகவும் புத்திசாலிதனமாக சாதித்துக்குகொள்ளவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.மேலும், 79 இலட்சம் மக்கள் உணவுத் தேவைக்காக வீடுகளிலிருக்கும் தளப்பாடங்களை விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. நாட்டில் என்றாவதொரு நாள் இந்நிலை ஏற்பட்டது இல்லை. இந்த பின்னணியிலேயே தேசிய கடன் மறுசீரமைப்புச் செய்யும் அநீதியான செயற்பாடுகளுக்காக நாட்டை இரகசியமாக முடக்கிவிட்டு அவசர தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சகல கடன் உரிமைகயாளர்கள் தொடர்பிலும் ஒரேமாதிரியான கொள்கையை பின்பற்றுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறெனில் தேசிய கடன் தொடர்பில் விசேட தன்மைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை என்பதே இதன் பொருளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கடன் உரிமையாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை போன்றதொரு செயற்பாடுகள் இல்லாமல், தேசிய கடன் உரிமையாளர்கள் தொடர்பில் சற்று மாறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நிலை வெளிநாடுகளுக்கு ஏற்பட்டபோது அவர்கள் மிகவும் சாணக்கியத்தனமாக நடந்துக்கொண்டன்.
20 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தன.ஆனால்இ அந்த நாடுகள் தேசிய கடன் மறுசீரமைப்பு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களில் ஆறு நாடுகள் வங்குரோத்து நிலையிலிருந்திருந்தாலும் அவர்களும் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு முன்னர் எதற்கு இணங்க வேண்டும் எதற்கு இணங்க கூடாது என்பதே அவசியமாகவுள்ளது என தெரிவித்தார்.