இங்கிலாந்தில் வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள 1 கோடி சம்பளம்: 400 பேர் விண்ணப்பம்.

Adam, Joseph Denovan; Two Dogs; The Stirling Smith Art Gallery & Museum; http://www.artuk.org/artworks/two-dogs-126981

இங்கிலாந்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள 1 கோடி சம்பளம் அறித்துள்ளது. இங்கிலாந்தில் வசித்துவரும் ஒரு பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க 127,227 அமெரிக்க டாலர் வேலை வழங்க தயாராக உள்ளது.

விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தல், கால்நடை மருத்துவருடன் சந்திப்புகள் திட்டமிடல் போன்றவை, மாலை மற்றும் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்கள் உட்பட எந்த நேரம் அழைத்தாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு எனவும்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, சுமார் 400 பேர் இந்த வேலையில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.