திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றது
Keshihan Ilamuruganathan-திருகோணமலை
திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவையானது இன்று (21/06/2023) சேருவில பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையானது திருகோணமலை மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றமையைத் தொடர்ந்து இன்று சேருவில பிரதேச செயலகத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மின் கணக்கின் பெயர் மற்றும் முகவரியை மாற்றுதல், மின்சார மெனு, மின் கம்பங்கள் மற்றும் கேபிள் லைன்கள், மின்சார அனுமதி மற்றும் தொடர்புடைய இழப்பீடு,மரக்கிளைகளை வெட்டுதல், புதிய மின் இணைப்புகள், அமைப்பை மாற்றுதல், மின் கட்டணம் மற்றும் மின் தடை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வாக இந்நடமாடும் சேவை இடம்பெற்றது .
இந்நடமாடும் சேவையில் நுகர்வோர் விவகார பிரிவு மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் ரொஷான் வீரசூரிய, திருகோணமலை பிரதான மின் பொறியியலாளர் ஐ.எஸ் பீலிசன் , துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.