திருகோணமலை-சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நடைபவனி.
Keshihan Ilamuruganathan-திருகோணமலை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலை 8 மணி அளவில் திருக்கோணமலை உட் துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் இருந்து யோகா விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமாகி, துறைமுக சந்தி ஊடாக, தபால் கந்தோர் சந்தியை அடைந்து அங்கிருந்து நகர சபை சந்தியுடாக கிழக்குப் பல்கலைக்கழகம் திருக்கோணமலை வளாகத்தின் உத்தியோகர் தங்கும் இடத்தை வந்தடைந்தது.
இந்த நடைபவனியை யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கிழக்குப் பல்கலைக்கழகம் திருக்கோணமலை வளாகத்தின் சித்த மருத்துவ பீடம் ஒழுங்கமைத்து இருந்தது.
இதன்போது இந்த விழிப்புணர்வு நடைபவனிக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் தனது ஒத்துழைப்பை வழங்கி இருந்தது. மேலும் சித்த மருத்துவ பீட மாணவர்கள், சுதேச மருத்துவத் திணைக்கள உத்தியோகத்தர்கள், சித்த மருத்துவ பீட விரிவுரையாளர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.