சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் யாழ். வந்தடைந்த சொகுசு கப்பல்.!
சென்னையில் இருந்து நூறு பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் பாலடி சில்வா அடங்கிய குழுவினர் வரவேற்றனர்.
காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி, குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சென்னை துறைமுகத்தில் இருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத்தந்த குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்று பின்னர், காங்கேசன் துறை துறைமுகம் சென்று திரும்பும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.