ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் கிழக்கு மாகாண ஆளுநர்!
Keshihan Ilamuruganathan-திருகோணமலை
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று(16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, விமல வீர திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் R.M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.