அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று அதிகரிப்பு .
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய (16) கொள்முதல் விலை 300.51 ரூபாயாக பதிவாகியுள்ளது.விற்பனை விலை 319.66 ரூபாயாகும்.
இதேவேளை, நேற்று (15) டொலரின் கொள்வனவு விலை 311.60 ரூபாயாகவும் விற்பனை விலை 328.92 ரூபாயாகவும் பதிவாகி இருந்தது.
அதன்படி, ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்வடைந்துள்ளது.