செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரமுடியாது-ஆளுநர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யவும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சரின் பரிந்துரையை 2-வது முறையாக மீண்டும் ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து ஆளுநர், செந்தில் பாலாஜி குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சராக தொடரமுடியாது என்று கூறி முதல்வரின் பரிந்துரையை மறுத்துள்ளார். மேலும் அமைச்சர்கள் தங்கம்  தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்ய ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளான மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சார துறையும், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு ஆயத்தீர்வை துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.