விடுதலையான 28 அரசியல் கைதிகளுக்கு தலா 25லட்சம் வழங்கியுள்ள லைக்கா குழு நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன்.
லைக்கா முதலாளியான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையான 28 அரசியல் கைதிகளுக்கு தலா 25லட்சம் ரூபாவீதம் 7 கோடி ரூபா வழங்கியுள்ளார்.இலங்கை அரசாங்கத்தினால் அண்மைக் காலங்களில் விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளான செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான ஒவ்வொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும் நீதிமன்ற தீர்ப்புகளாலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நீண்டகாலம் சிறைகளில் தமது வாழ்வை தொலைத்த இவர்கள் தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும் தமது குடும்பங்களுடனும் சமூகத்துடனும் இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதனை உணர்ந்த சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.
அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை முதற்கட்டமாக விடுதலை பெற்ற 8 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.