தாளையடி-அடித்து நொருக்கப்பட்ட அன்னைவேளாகன்னி திருச்சுருப கண்ணாடி.
யாழ்ப்பாணம் தாளையடி கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பழமைவாய்ந்த அன்னைவேளாகன்னி சிற்றாலயத்தின் திருச்சுருப கண்ணாடி பகுதி சில விசமிகளால் முற்றாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் செவாய்க்கிழமை( 13.06.2023) இரவு வேளை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இதுவரைக்கும் பிரதேச போலீசார் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் அண்மைய காலங்களில் இரவு வேளைகளில் போதைப்பொருள் கடத்தல் இடமாகவும் , ஆலயத்தின் அருகாமையில் இருந்து மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.