ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">