மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பொறிஸ் ஜோன்சன் முயற்சி
பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறிஸ் ஜோன்சன் வருவதை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தை பொறிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரங்களையும், ஒன்றுகூடல்களையும் நடத்தியமை தொடர்பாக பொறிஸ் ஜோன்சன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.இந்த நிலையில் தற்போது வெற்றியிடமாகியுள்ள மேற்கு லண்டனில் உள்ள அக்ஸ்ப்ரிட்ஜ் அன்ட் சௌத் றைஸ்லிப் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.அந்த வகையில் குறித்த தொகுதியில் மீண்டும் பொறிஸ் ஜோன்சன் போட்டியிடுவதை சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயற்சித்தால், அது உள்கட்சி போருக்கு வழிவகுக்கும் என கென்சவேட்டிவ் கட்சியின் பேச்சாளரான ஜேக்கப் ரீஸ்-மோக் கூறியுள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிட எதிர்பார்த்துள்ள வேட்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் பொறிஸ் ஜோன்சனுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.