மக்கள் ஆணைக்கு இடங்கொடு! உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்த கோரி போராட்டம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள் இல்லை என  ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். மக்கள் ஆணைக்கு இடங்கொடு! உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்த!!’ என்று வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று மாலை நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் ரில்வின் சில்வா உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர்கள்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மக்கள் எனப் பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தை முன்னிட்டுப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.