அவுஸ்திரேலியா, இந்தியா இடையில் புலம்பெயர்வு ஒப்பந்தம்.

அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புலம்பெயர்வு ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மாணவர்கள், பட்டதாரிகள், ஆய்வாளர்கள், தொழில் செய்வோர் புலம்பெயர்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்த வந்தது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்குப்படி, கடந்த 2016ம் ஆண்டு முதல் சுமார் 10 இலட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்திருக்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

தடுப்பு முகாமை நடத்த ஊழல் தொழிலதிபருக்கு பல மில்லியன் டாலர்களை வழங்கிய முன்னாள் அவுஸ்திரேலிய அரசாங்கம் நவுருத்தீவில் இருக்கும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சேவைகளை வழங்குவதற்காக ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் கூறப்பட்ட தொழிலதிபருக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை தாராளவாத கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

மொசமில் குலாமபாஸ் போஜானி என அறியப்படும் அத்தொழிலதிபர், பாஸ்பேட் சுரங்க ஒப்பந்தங்களை பெறுவதற்காக நவுரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சருக்கும் 120,000 டொலர்களை இலஞ்சமாக கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையிலும் இவரது நிறுவனத்துக்கு 17.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான தடுப்பு முகாம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.