கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து அவரது நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறுகின்ற செயல்: எம்.ஏ.சுமந்திரன் கண்டனம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்குச் சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதோ – அவரைக் கைது செய்வதோ அவரது நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறுகின்ற செயல். நாடாளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற வேளையில் அதில் கலந்துகொள்வதைத் தடுக்கும் செயல் சட்டவிரோதமானதும் அடக்குமுறையின் வெளிப்பாடும் ஆகும் என்று இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தனது ருவிட்டரில் இன்று,பதிவிட்டுள்ளார்.