போலியான ஆவணங்களை கொண்டு 1 லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பிரித்தானியாவிற்குள் உள்நுழைந்ததாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்
போலியான ஆவணங்கள் மற்றும் தகவல்களை சமர்ப்பித்து 01 லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பிரித்தானிய தொழில் வீசாக்களை பெற்றுக் கொள்வதற்காக நாட்டிற்கு வந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பல போலி சான்றிதழ்கள் புலனாய்வுக் குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏஜென்சிகளுக்கு பெருமளவு பணம் செலுத்தப்பட்டு, தொழில்முறை விசாக்கள் பெறப்பட்டு, இவ்வாறு பெறப்பட்ட தொழில்முறை விசாக்களுடன் பிரித்தானியாவுக்கு வந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது