இந்தியாவின் ஒடிசா ரயில் விபத்து: விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் கோரிக்கை
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.02 பயணிகள் ரயில்களும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று கூறினார்.ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் பிழையே காரணம் என ஒடிசா ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்கு காரணமான 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.