ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் கைது செய்யப்பட்ட 10 வயது துன்னாலைச் சிறுவன்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்  ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச்  சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய குறித்த  சிறுவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். இந்தச் சிறுவன் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் ஹெரோயினை உடலில் ஏற்றிக் கொள்ளும் வேளையில்  பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் இவ்வாறு ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக  பொலிஸ் விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.