எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல் கூட்டணி.


எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் மற்றும் நபர்கள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுயாதீன அணியொன்று இணைந்தே புதிய கூட்டணிக்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியில் இருந்து சுயாதீனமாகச் செயற்படுவது குறித்தும் எதிர்காலத்தில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.