ஆடுகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானம்.
ஒரு ஆட்டின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளமையோ அல்லது கட்டாக்காலி ஆடுகள் திருடப்படுவதனாலோயோ அரசாங்கம் இப்போது இந்த சட்டத்தினைக் கொணர்ந்துள்ளது.
இப்போது ஆடுகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையானது வெள்ளாடுகளுக்கான காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டபிள்யூ.எம்.பி. வீரசேகர தெரிவித்தார்.ஒரு ஆட்டின் மதிப்பு பொதுவாக ரூ. ஒரு லட்சம் மற்றும்ஆடுகளின் காப்பீட்டிற்கு ஆண்டுக்கு 400 பிரீமியம் செலுத்த வேண்டும். அதன்படி, ஆடு திருடப்பட்டாலோ, திடீரென இறந்தாலோ இழப்பீடு வழங்கப்படும்.