எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும்.

நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை  தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்  எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.

இதற்கமைய 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த பொருட்களின் மொத்த மதிப்புக்கான பண வைப்பு வரம்பை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கைத்தொலைபேசிகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்து காணப்பட்ட நிலையில் விரைவில் அவற்றின் விலைகள் மீண்டும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.