திருக்கோணமலை பாலையூற்று பாலமுருகன் ஆலய வருடாந்த இரதோட்சவம்.
Keshihan Ilamuruganathan- திருகோணமலை
திருக்கோணமலை பாலையூற்று பாலமுருகன் ஆலய வருடாந்த இரதோட்சவம் இன்றைய தினம் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
அலங்கார மண்டப விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று, வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் ஆலய உள்வீதி வலம் வந்து, தேரில் எழுந்தருளினார்.
தேர் ஆலயத்தை சுற்றி வலம் வந்ததுடன், மாணவர்களால் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
அடியார்கள் அங்கப் பிரதட்சனம் செய்தனர். மதியம் 11:15 மணியளவில் தேர் ஆலயத்தை சுற்றி ஆலய வாயிலை அடைந்தது.
இந்த ஆலயமானது கதிர்காமத்திற்கு நடைபாதையாக தல யாத்திரை செல்லும் அடியார் ஒருவரினால் 1968 ஆம் ஆண்டு கதிர்காமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலினை வாகை மரம் நிழலில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.