கிழக்கில் அரச காணிகளில் கஞ்சா: கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் உறுதி.
கிழக்கில் அரச காணிகளில் கஞ்சா பயிர் செய்கையைத் தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார் .கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், பல்வேறு அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட காணிகளில் கஞ்சா அல்லது கஞ்சா பயிரிடப்படுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அமைப்புகளின் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு அளித்த சுருக்கமான பேட்டியில்இ விவசாயிகளை மட்டும் தண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். எவ்வாறாயினும்இ இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பான அரச நிறுவனங்களை பெயரிட அவர் மறுத்துவிட்டார்.