ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லையைக் கடக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது.


பூஞ்ச் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் எல்லைக் கட்டுப்பாட்டு வேலியை கடக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் கடக்க முயன்றுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அறிந்த எல்லை பாதுகாப்புப் படையினர், துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ வீரர் மற்றும் பயங்கரவாதிகளில் ஒருவரும் காயமடைந்தனர்.

இதன்பின் 3 பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கர்மாராவைச் சேர்ந்த முகமது ஃபரூக்இ முகமது ரியாஸ் மற்றும் முகமது ஜுபைர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதில் முகமது ஃபரூக் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.