கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றும் மரணதண்டனைக் கைதி

இலங்கையில் மரண தண்டனைக் கைதி உட்பட 10 சிறைக் கைதிகள் இந்த ஆண்டு நடைபெறும் கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். சாதாரண தரம், உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் கைதிகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளதுடன், கல்வியில் ஆர்வமுள்ள சகல கைதிகளுக்கும் சிறைச்சாலையில் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையே பிரதான காரணமாகும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சை இன்று  தொடங்கி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறுகிறது.